
தமிழக அரசியல் மற்றும் திரைப்பட உலகில் முக்கிய முகமாக விளங்கும் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி எழிலரசி திடீரென மாற்றப்பட்டு விழுப்புரம் நீதிமன்றத்திற்கு பணியமர்த்தப்பட்டுள்ளார்.
இருவரும் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகாமல், காணொளி வாயிலாக முன்னிலையாக அனுமதி வழங்கப்பட்ட நிலையில் இந்த மாற்றம் இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கு, தற்போது ஜூன் 15ஆம் தேதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தல் பணிகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இரு தரப்பு சட்டத்தரணிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையின் பின்னர், இருவரும் சுமூகமாக பிரிவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜீவனாம்சம் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பான சொத்து விவகாரங்களும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் ஏற்பட்டுள்ள புதிய முன்னேற்றங்கள் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
