இலங்கை அஞ்சல் திணைக்களம் அமெரிக்க அஞ்சல் சேவைக்கு அனுப்பியதாகக் கூறப்படும் 625,000 அமெரிக்க டொலர் தொகை கிடைக்கவில்லை என அமெரிக்க தரப்பு அறிவித்துள்ளது. இதை அஞ்சல் மா அதிபர் ஆர்.பி. சத்குமார உறுதிப்படுத்தியுள்ளார்.

திணைக்களம் பணம் அனுப்பியதாகக் கூறினாலும், அந்த நிதி தமக்கு வரவில்லை என அமெரிக்க அஞ்சல் சேவை தெரிவித்துள்ளது. இதனால் சம்பவம் தொடர்பில் விளக்கங்கள் கோரப்பட்டுள்ளன.
ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில், இது ‘பிஷிங்’ இணைய மோசடியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மின்னஞ்சல் மூலம் வங்கிக் கணக்கு விவரங்கள் மாற்றப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளதுடன், குறித்த கணக்கு தற்போது செயலிழந்துள்ளதாக வங்கி தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதேவேளை, அஞ்சல் திணைக்களத்திற்குள் உள்ளக விசாரணைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
மேலும், அமைச்சரவை பேச்சாளர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ இந்த நிதி மோசடி குறித்த விசாரணைகள் நடைபெற்று வருவதை உறுதிப்படுத்தியுள்ளார்.
