
யஷ் நடிப்பில், Geetu Mohandas இயக்கத்தில் உருவாகி வரும் Toxic திரைப்படம் மீண்டும் தாமதமாகியுள்ளது.
இந்தப் படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா, சுதேவ் நாயர், அக்ஷய் ஒபராய் மற்றும் ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பல மொழிகளில் வெளியாகவிருந்த இந்த திரைப்படம் முதலில் மார்ச் 19ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் அது ஜூன் 4ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
ஆனால் தற்போது, ஜூன் மாதத்திலும் படம் வெளியாகாது என்றும், புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் யஷ் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியான இந்த வெளியீட்டு தாமதம், படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு பெரும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
