
எதிர்வரும் மே முதலாம் திகதி நடைபெறவுள்ள மே தினப் பேரணியில் ஒன்றிணைந்து கலந்துகொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கு (UNP) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்துள்ளார்.
கொழும்பு மாளிகாவத்தையில் அமைந்துள்ள பி.டி. சிரிசேன மைதானத்தில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைத்து முற்போக்கு சக்திகளுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
விடுத்துள்ள விசேட அறிக்கையில் அவர், நாட்டின் நலனை முன்னிறுத்தி அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
“நாட்டைப் பற்றி சிந்தித்து நாம் அனைவரும் ஒன்றிணைவோம். எமது மே தினப் பேரணியில் கலந்துகொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஏனைய முற்போக்கு சக்திகளுக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன்” எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
