
யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் பெண்களை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, வரும் 29 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று மல்லாகம் நீதவான் முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது, இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு இணங்க, அவர் இன்று காலை இளவாலை காவல்நிலையத்தில் முன்னிலையாகியபோது கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
