
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 33ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
மும்பையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்களைப் பெற்றது. அணியின் சார்பில் சஞ்சு சாம்சன் 101 ஓட்டங்களைப் பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
208 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்த மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை அணியின் சுழற்பந்து வீச்சில் சிக்கி 19 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 104 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
பந்துவீச்சில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் அகீல் ஹொசைன் 4 விக்கெட்டுகளையும், நூர் அஹமட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
