
சர்வதேச சந்தையில் கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன.
அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் சர்வதேச விலை 4,672 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அதேவேளை, ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 74 டொலராக உள்ளது.
இதன் தாக்கம் இலங்கையிலும் காணப்பட்டு, இன்று (24) தங்கத்தின் விலை சுமார் 2,000 ரூபாயால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய விலை நிலவரப்படி:
- 24 கரட் தங்கம் பவுண் ஒன்று: ரூ. 394,000
- 22 கரட் தங்கம் பவுண் ஒன்று: ரூ. 362,500
கிராம் அளவில் பார்க்கும்போது:
- 24 கரட் தங்கம் ஒரு கிராம்: ரூ. 49,250
- 22 கரட் தங்கம் ஒரு கிராம்: ரூ. 45,312
சர்வதேச சந்தை மாற்றங்களின் தாக்கமாக உள்ளூர் தங்க விலை தொடர்ந்து அலைபாயும் நிலை காணப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
