
சமீபத்தில் வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) அறிவித்துள்ளது.
விண்ணப்பங்கள் அனைத்தும் நிகழ்நிலை (Online) முறையில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட உள்ளன. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க மூன்று வார கால அவகாசம் வழங்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல்கலைக்கழக அனுமதி தொடர்பான விரிவான அறிவுறுத்தல்களை உள்ளடக்கிய கைநூல் (Handbook) விரைவில் வெளியிடப்படும் எனவும் UGC தெரிவித்துள்ளது.
