
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர்.
உந்துருளியில் பயணித்த இருவரும் கனரக வாகனத்துடன் நேரிட்ட மோதலில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 65 வயதுடைய தந்தையும், 29 வயதுடைய மகனும் ஆவார். இவர்களின் உடல்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
சம்பவத்துடன் தொடர்புடைய கனரக வாகனத்தின் சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
