
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன், இன்று நுவரெலியா – ராகலை பகுதியில் அமைந்துள்ள லிட்டஸ்டேல் பெருந்தோட்டத்திற்கு விஜயம் செய்தார்.
அங்கு இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன், இந்திய வீடமைப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளைப் பார்வையிட்ட அவர், பயனாளிகளுடனும் நேரடியாக கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பின் போது இந்திய வம்சாவளி தமிழ் மக்களைச் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்த அவர், இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக இந்திய அரசாங்கமும் மக்களும் உறுதியாக அர்ப்பணிப்புடன் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மலையகப் பகுதிகளிலும் உள்ள தமிழ் மக்களுக்காக இதுவரை 50,000 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக, நான்காம் கட்டத்தின் கீழ் மேலும் 10,000 வீடுகள் விரைவில் வழங்கப்படும் என்றும் துணை ஜனாதிபதி உறுதியளித்தார்.
