
இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, அவர் எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இந்த விஜயத்தின் போது, இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட உயர்மட்ட அரசியல் தலைவர்களுடன் சந்திப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த பயணத்தின் போது பல முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ள இந்திய துணை ஜனாதிபதி, இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பல புரிந்துணர்வு உடன்படிக்கைகளிலும் கையெழுத்திட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், உயர்மட்ட இந்திய தூதுக்குழுவும் இந்த விஜயத்தில் பங்கேற்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
