
யாழ்ப்பாணத்தில் புத்தாண்டு வேகத்தில் ஒன்றை ஒன்று முந்த முறப்பட்டபோது இரு பேருந்துகள் உரசி விபத்து சம்பவத்துள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று காலை 9.15 மணியளவில் மானிப்பாய் அந்தோனியார் கோவிலுக்கு முன்பாக விபத்துக்குள்ளாகியது.
காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்ட தனியார் பேருந்தும் அரச பேருந்தும் ஒன்றை ஒன்று முந்தி சொல்ல முற்பட்ட நிலையில் இரு பேருந்துகளும் விபத்தில் சிக்கியது.
தனியார் பேருந்தை முந்தி செல்ல முற்பட்ட அரச பேருந்து முன்னால் வந்த மகிழுந்துக்கு இடம் கொடுக்க முற்பட்ட வேளை இந்த விபத்து சம்பவித்து உள்ளது.
மேலும் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் காவல் துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
