யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்கரை பகுதியில், முதியவர் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் இன்று (31.03.2026) மீட்கப்பட்டுள்ளது.
தகவல்களின் படி, உயிரிழந்த நபர் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) தனது குடும்பத்தினருடன் ஏற்பட்ட முரண்பாட்டின் பின்னர் கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் பின்னர் அவர் நீண்ட நேரமாக வீடு திரும்பாததால், உறவினர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது, குறித்த முதியவர் கடற்கரை பகுதியில் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.