மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையின் தாக்கம் காரணமாக, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்த நிலையில் காணப்படுகிறது.

அதன்படி, பிரெண்ட் வகை கச்சா எண்ணெய் ஒரு பேரலின் விலை 107.02 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அதேவேளை, WTI கச்சா எண்ணெய் ஒரு பேரல் 94.2 அமெரிக்க டொலராக விற்பனையாகிறது.
இந்த உயர்வு, உலகளாவிய எரிசக்தி சந்தையில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், எதிர்கால விலை நிலவரம் குறித்த அச்சத்தையும் அதிகரித்துள்ளது.