சர்வதேச அரசியல் மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான போர்ச் சூழ்நிலையின் தாக்கத்தால், உலகச் சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

சில காலமாக வீழ்ச்சியடைந்திருந்த தங்க விலை, தற்போது மீண்டும் உயர்வை நோக்கி நகர்ந்து வருகிறது. சமீபத்திய தரவுகளின்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,413.02 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
அதேவேளை, ஒரு அவுண்ஸ் வெள்ளி 70.23 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
இந்த சர்வதேச விலை உயர்வின் தாக்கமாக, இலங்கையிலும் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நேற்றைய தினம் மட்டும் தங்க விலை மூன்று முறை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.