
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் நுகர்வை குறைக்கும் நோக்கில் பாடசாலைகளை மூடுவதற்கோ அல்லது முழுமையாக கட்டுப்படுத்துவதற்கோ அரசாங்கம் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை என அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து கருத்து தெரிவிக்கும்போது அவர் இதை குறிப்பிட்டார்.
திட்டமிட்டபடி முதலாம் பாடசாலை தவணை ஏப்ரல் 10ஆம் திகதியுடன் நிறைவடையும் என்றும், அதுவரை புதன்கிழமைகளில் மட்டும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், கடந்த காலங்களில் சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் தொடர்பாக ஏற்பட்ட நிச்சயமற்ற நிலைமை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியதால், வாரத்தில் குறைந்தது நான்கு நாட்களாவது பாடசாலைகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.