
நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த அறிவிப்புகள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது R. J. Balaji இயக்கத்தில் அவர் நடிக்கும் ‘கருப்பு’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் (Dream Warrior Pictures) தயாரிப்பில், சாய் அபயங்கலர் இசையில் உருவாகும் இந்த படம் சூர்யாவின் 45-ஆவது திரைப்படமாகும். இப்படத்திற்கு ‘கருப்பு’ (Karuppu) என பெயரிடப்பட்டுள்ளது.
படக்குழு வெளியிட்ட தகவலின்படி, ‘கருப்பு’ திரைப்படம் 2026 மே 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதேவேளை, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தின் டீசர் கடந்த வாரம் வெளியாகியிருந்தது. அந்த படம் எதிர்வரும் ஜூலை மாதம் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.
சூர்யாவின் படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திலும் கொண்டாட்ட மனநிலையிலும் உள்ளனர். கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டிருந்தாலும், வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாததால் ஏற்பட்டிருந்த எதிர்பார்ப்பு தற்போது இந்த அறிவிப்பால் முடிவுக்கு வந்துள்ளது.