எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு

இலங்கையில் நிலவி வந்த எரிவாயு பற்றாக்குறைக்கு தீர்வாக முக்கிய தகவலை லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, இலங்கைக்குச் சொந்தமான 42,000 மெட்ரிக் டன் எரிவாயு இருப்பு தற்போது மாலைதீவில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இருப்பு ஏப்ரல் மாதத்திற்கான உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்கும் என நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த எரிவாயு கையிருப்பை விரைவில் இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, லாக்ஃப்ஸ் கேஸ் நிறுவனம் சார்பில், 7,000 மெட்ரிக் டன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் ஏப்ரல் 4ஆம் தேதி நாட்டை வந்தடையும் என அதன் தலைமை நிர்வாக அதிகாரி நலிந்த குருகுலசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த முன்னேற்றங்கள் மூலம், நாட்டில் நிலவும் எரிவாயு விநியோக சிக்கல்கள் விரைவில் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top