
ஜனாதிபதி அவர்கள் பிரிக்ஸ் மாநாட்டில் நேரடியாக கலந்து கொண்டிருந்தால், எரிபொருள் நெருக்கடி தொடர்பில் ரஷ்யாவிடமிருந்து மேலும் விரைவானதும் சிறந்ததுமான ஒத்துழைப்பைப் பெற முடிந்திருக்குமென நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று (28) பத்தரமுல்லையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது அவர் இதனை கூறினார்.
பிரிக்ஸ் மாநாட்டிற்கு அழைப்பு கிடைத்திருந்தபோதிலும், ஜனாதிபதி அதில் பங்கேற்கவில்லை என அவர் குறிப்பிட்டார். அந்த வாய்ப்பை பயன்படுத்தியிருந்தால், ரஷ்ய எரிசக்தி துணை அமைச்சரின் வருகைக்காக காத்திருக்காமல், அங்கு நேரடியாகவே எரிபொருள் பிரச்சினை குறித்து பேசி தீர்வு கண்டிருக்க முடிந்திருக்குமெனவும் அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், தாமதமாக இருந்தாலும் தற்போது இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது எனவும் நாமல் ராஜபக்ஷ மேலும் கூறினார்.